அமெரிக்கா அதிபர் டிரம்ப். 
உலகம்

மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல்! 2 ஆம் உலகப் போருக்கு பிறகு... அதிபர் டிரம்ப் பெருமிதம்!

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல் இது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

வெனிசுவேலா மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல் இது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று (ஜன. 3) காலை வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக அத்துமீறி வான்வெளித் தாக்குதலை நடத்த உத்தரவிட்டார்.

தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்ஸையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தியதாக டிரம்ப் அறிவித்தார்.

இந்தத் தாக்குதல் ஏன்? எதற்காக நடத்தப்பட்டது குறித்து வெள்ளை மாளிகையில் இன்று அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், “நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை எனது உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுவேலா தலைநகரில் மிகப் பெரிய நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்தத் தாக்குதலில் தரை வழி, கடல் வழி, வான்வெளி என முப்படைகளும் சேர்ந்து மிகப் பிரமாண்ட தாக்குதலில் ஈடுபட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல் இது.

சட்டவிரோதி சர்வாதிகாரி மதுரோவை நீதியின் முன் நிறுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க ராணுவத்தின் வலிமையை பிரமிக்க வைக்கும் நடவடிக்கைகளில் மிக முக்கியமானது இது.

வெனிசுவேலா மக்களை பணக்காரர்களாகவும், சுதந்திரமானவர்களாவும், பாதுகாப்பானவர்களாவும் மாற்றுவோம். சர்வாதிகாரி மதுரோ, மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தலின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

மதுரோவும் அவரது மனைவியும் விரைவில் அமெரிக்க நீதியின் விசாரணைக்கு முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் இருவரும் இப்போது ஒரு கப்பலில் உள்ளனர். அந்தக் கப்பல் நியூயார்க் செல்லவிருக்கிறது. அதன்பின்னர், நியூயார்க் மியாமி அல்லது புளோரிடாவுக்கு இடையே ஒரு முடிவெடுக்கப்படும் என கருதுகிறேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர் எல்லார்க்கும் எல்லாம்

SCROLL FOR NEXT