வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு!
வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவித்திருப்பது பற்றி...
வங்கதேசத்துக்கு மீண்டும் திரும்பப் போவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு, வங்கதேசத்தில் வெடித்த போராட்டம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, வங்கதேச வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகியிருக்கும் தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு, ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்தியாவிடம் தூதரகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள ஷேக் ஹசீனா, வங்கதேசம் திரும்பப் போவதாக தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
”வருகின்ற டிசம்பர் மாதம், நானும் பிற தலைவர்களும் வங்கதேசத்துக்கு திரும்பி, நீதிமன்றத்தில் சரணடையப் போகிறோம்.
நாங்கள் நாடு திரும்பியவுடன் எங்களை கைது செய்யலாம் அல்லது கொலை செய்யலாம். தற்போதைய அதிகாரிகளுடன் தொடர்பில் இல்லை.
எனது கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மிகப்பெரிய அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மரணம் என்றால் அது என் சொந்த மண்ணில்தான். என் பெற்றோர்கள் புதைக்கப்பட்ட, அவர்கள் ரத்தம் சிந்திய இடத்தில்தான்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு (2024) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு வாக்குகளில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டி அந்நாட்டின் முக்கிய கட்சிகள் பொதுத்தேர்தலை புறக்கணித்தன.
அந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்தப் போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக மாறியது.
இறுதியில், வங்கதேச உச்சநீதிமன்றம், அமைச்சர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. மேலும், அமைச்சர்கள் சிலரை இளைஞர்கள் விரட்டி விரட்டி தாக்கினர். அப்போது வெடித்த ஜென் ஸீ போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 2500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
நாட்டின் நிலைமை மோசமானதைத் தொடர்ந்தும், இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியாத ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதனைத்தொடர்ந்து வங்கதேச ராணுவம் அதிகாரத்தை கையில் வந்தபிறகு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, போராட்டம் முடிவுக்கு வந்தது.
Sheikh Hasina announces she will return to Bangladesh!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.