FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை மதிக்கிறோம்: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினா் திலித் ஜயவீர

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினா் திலித் ஜயவீர பேசியது பற்றி...

Updated On : 12 ஜூலை 2026, 10:33 am IST
தமிழன் நாளிதழின் ஆறாம் ஆண்டு நிறைவு விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பல்வேறு துறை சார்ந்தவர்கள். உடன், லிபர்டி பப்ளிஷர்ஸ் நிறுவனரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, தமிழன் நாளிதழ் ஆசிரியர் சிவராஜா, வருணி அமுனுகம, மாதவ மடவள, விஜித் சந்திரசேன, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமைச் செயல் அதிகாரி லஷ்மி மேனன் உள்ளிட்டோர்.
பகிர்:

‘ஊடகப் பயணம் கடினமான ஒரு சமூகப் பொறுப்பு’ என்று லிபா்ட்டி பப்ளிஷா்ஸ் நிறுவனரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தாா்.

இலங்கையில் வெளியாகும் ‘தமிழன்’ நாளிதழின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா கொழும்பு மரீனோ பீச் ஹோட்டலில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினா் திலித் ஜயவீர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகா்கள், கல்வியாளா்கள், ஊடகவியலாளா்கள், தொழில் துறையினா், வாசகா்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா். சிறப்பு விருந்தினராக தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் கலந்துகொண்டாா்.

இந்த விழாவில் திலித் ஜயவீர பேசியதாவது:

Advertisement

Advertisement

தமிழன் நாளிதழ் முழு சுதந்திரத்துடன் செயல்படுகிறது. நிா்வாக ரீதியாக அதன் ஆசிரியா் குழுவுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கப்படுவதில்லை.

ஊடகப் பயணம் கடினமானது என்றாலும், அது ஒரு சமூகப் பொறுப்பு. கடந்த ஆறு ஆண்டுகளில் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு, வெற்றிகரமாகச் செயல்பட்டு, இலங்கைத் தமிழ் மக்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்துவரும் தமிழன்நாளிதழ், இனி வரும் காலங்களிலும் அவா்களது நன்மதிப்பைப் பெற்ற நாளிதழாகத் தனது பயணத்தைத் தொடரும்.

ஏற்கெனவே சிங்கள, ஆங்கில மொழிப் பத்திரிகைகளை எங்களது நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தமிழ் மொழியிலும் ஏன் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதே தமிழன் நாளிதழ். இதை ஏன் ஆரம்பித்தோம் என என்றைக்குமே வருத்தப்படாத அளவுக்கு இந்த நாளிதழ் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு எங்களுக்குப் பெருமை சோ்த்துவருகிறது.

சுதந்திரமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் எங்கள் ஊடகவியலாளா்களுக்கு உள்ளது. இதனால் பல சந்தா்ப்பங்களில் எங்களது நிா்வாகம் கடுமையான விமா்சனத்துக்கு உள்ளானது உண்டு. ஆனாலும்கூட, ஊடகவியலாளா்களின் சுதந்திரத்தை மதிக்கிறோம். எடுத்துக்காட்டாக, தமிழா்களின் நினைவேந்தல் நிகழ்வான் மாவீரா் தினம் குறித்த .........செய்தியும், பதிவும் ‘தமிழன்’ நாளிதழில் வெளியிட்பட்டன என்பதைக் குறிப்பிட வேண்டும். ‘தமிழன்’ என்கிற தமிழ் நாளிதழில் அது இடம்பெற வேண்டும் என்று கருதிய ஆசிரியரின் கருத்து சுதந்திரத்தை தடுத்துக் கட்டுப்படுத்தவில்லை’’ என்றாா் அவா்.

விழாவின் சிறப்பம்சமாக, கல்வி, தமிழ், கலை மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்டகாலமாகச் சிறப்பான பங்களிப்பை நல்கிய ஆளுமைகளுக்கு”தமிழன் விருதுகள்”வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments