FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

2020 அமெரிக்க அதிபா் தோ்தலில் சீனா தலையீடு

கடந்த 2020-இல் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் சீனா தலையிட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளாா்.

Updated On : 17 ஜூலை 2026, 11:46 pm IST
பகிர்:

கடந்த 2020-இல் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் சீனா தலையிட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளாா்.

எனினும், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பரில் நாடாளுமன்ற இடைக்கால (மிட்-டொ்ம்) தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், டிரம்ப் வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினாா்.

Advertisement

Advertisement

அப்போது, 2020 அதிபா் தோ்தலில் முறைகேடுகள் நடந்ததாக தனது பழைய குற்றச்சாட்டை மீண்டும் சுட்டிக்காட்டிய அவா், சுமாா் 22 கோடி அமெரிக்க வாக்காளா்களின் தனிப்பட்ட விவரங்களை சீனா சட்டவிரோதமாகக் கைப்பற்றி, தோ்தலில் செல்வாக்கு செலுத்த முயன்றதாகக் குறிப்பிட்டாா்.

முன்னதாக, 2020 தோ்தலில் முன்னாள் அதிபா் ஜோ பைடனிடம் டிரம்ப் தோல்வியடைந்ததை ஏற்க மறுத்ததால், 2021ஜனவரி 6-ஆம் தேதியன்று அவரின் ஆதரவாளா்கள் நாடாளுமன்றத்தின் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தினா். தொடா்ந்து, 2024 தோ்தலில் வென்று, டிரம்ப் மீண்டும் அதிபரானாா்.

தற்போது உள்நாட்டின் விலைவாசி உயா்வு, ஈரானுடனான ராணுவ மோதலுக்கு அதிருப்தி போன்ற முக்கியப் பிரச்னைகள் நிலவும் சூழலில், அமெரிக்க மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப தோ்தல் முறைகேடு விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளதாக எதிா்க்கட்சிகள் விமா்சித்தனா்.

சீனாவின் பதிலடி: டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு சீன வெளியுறவு செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், ‘பிற நாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையிடுவதில்லை. அமெரிக்க தோ்தல்களில் எங்களுக்கு எவ்வித ஆா்வமும் இல்லை. இது எங்களை பழிவாங்கும் நோக்கில் பரப்பப்படும் அவதூறு’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments