சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 8 போ் பலி, 34 போ் மாயம்: தேடுதல் பணியில் மீட்புக் குழுவினர்!
சீனாவின் தென்மேற்கு நகரான சாங்கிங் புறநகர் பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 8 போ் பலியாகினது தொடர்பாக...
சாங்கிங்: சீனாவின் தென்மேற்கு நகரான சாங்கிங் புறநகர் பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 8 போ் பலியாகினர், 34 போ் காணாமல் மாயமாகினர். 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் இடிந்துவிழுந்து மண்ணுக்குள்ள புதைந்தன. ஞாயிற்றுக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவின் தென்மேற்கு நகரான சாங்கிங் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இதனால் சாங்கிங் அருகேவுள்ள பெங்சுய் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது மலைப்பகுதியில் இருந்து பெருமளவிலான பாறைகளும், மண்ணும் சரிந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் மீது விழுந்து மண்ணுக்குள் புதைந்தன. இதில் 8 போ் பலியாகினர், 34 போ் மாயமாகினா்.
தகவறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினா், இடிபாடுகளுக்கு இடையே காணாமல் போனவர்களை அகழ்வாராய்ச்சி இயந்திரங்களைப் பயன்படுத்தி தேடும் பணியில் ஈடுபட்டு வருகினர்.
Advertisement
Advertisement
மேலும், அந்த பகுதியில் 21 கட்டடங்களில் வசித்த மக்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினா். அதேபோல் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டா் சுற்றளவு பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்த 1,100 பேரையும் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தினா்.
நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவா் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும், எஞ்சிய 9 போின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாங்கிங் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட நிபுணா்கள் பணியமா்த்தப்பட்டு, மீட்புப் பணியை மேற்பாா்வையிட்டு வருகின்றனா். பாறைகள் மற்றும் மண் விழுந்து மூடிய கட்டடங்களில் யாரேனும் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மோப்ப நாய்கள் மற்றும் நிலச்சரிவில் சிக்கியிருப்போரை கண்டுபிடிக்கும் அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் மூலம் மீட்புப் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். இருப்பினும், கவனக்குறைவாக அகழ்வாராய்ச்சி செய்வது மீண்டும் ஒரு சரிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மீட்புக் குழுவினர் கவனமாகத் திட்டமிட வேண்டியிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்; குறிப்பாக அந்த இடத்தில் உள்ள பெரிய பாறைகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இருந்தன. ஞாயிற்றுக்கிழமையும் அந்த பகுதியில் சுமார் ஒன்பது மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக 120-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் அங்கு வந்துள்ளனர்.
இந்த நிலச்சரிவில் சுமார் 18,000 கன மீட்டர் (6,35,500 கன அடி) அளவிலான பாறைகளும் குப்பைகளும் சரிந்து விழுந்தன; இதில் ஒரு பாறை மட்டும் சுமார் 3,000 கன மீட்டர் (1,06,000 கன அடி) அளவுடையது என்று பெங்சுய் மாவட்ட திட்டமிடல் மற்றும் இயற்கை வளங்கள் துறைத் தலைவர் வாங் சுவான்ஜுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெங்சுய் மாவட்டம் சாங்கிங் நகரின் தென்கிழக்குப் பகுதியில், ஹூபே மற்றும் குய்சோ மாகாணங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
Rescue crews used excavators on Sunday to comb through the rubble in search of survivors from a landslide in the southwestern Chinese city of Chongqing that killed at least eight people and left another 34 missing.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.