FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

தொடரும் ரஷியா - உக்ரைன் போர்; டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி !

டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே நடைபெற உள்ள சந்திப்பு பற்றி....

Updated On : 28 ஜூலை 2026, 5:03 pm IST
உக்ரைன் அதிரர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப். - கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இன்று (ஜூலை 28) சந்திக்க உள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிப் 24 அன்று தொடங்கிய போர் தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கி உதவி செய்து வருகிறது.

உலகில் இதுவரை எத்தனையோ போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முயற்சிகளும் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் தோல்வியிலேயே முடிந்தன.

Advertisement

Advertisement

இதனிடையே அமெரிக்கா சென்றிருக்கும் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் இன்று டிரம்ப்பை சந்திக்கிறார். மேலும் இந்த மாதத்தில் இவர்கள் சந்திக்கும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பில் ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஈரான் - அமெரிக்கா போர் குறித்து ஜெலென்ஸ்கி கூறுகையில், ”ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்து, வளைகுடா நாடுகள் மற்றும் அங்கு அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ரஷியா செயற்கைக்கோள் மூலம் தீவிரமாகக் கண்காணிப்பதை நாங்கள் (உக்ரைன்) பதிவு செய்துள்ளோம். இந்தப் படங்கள் பின்னர் ஈரானில் வெளிவருகின்றன. எனவே, அமெரிக்காவுக்கு எதிரான இந்தப் போரில் ஈரானுக்கு ரஷியா உதவி வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.

ஆகையால், இந்த நிகழ்வு குறித்தும் டிரம்ப் - ஜெலென்ஸ்கி இடையே கலந்துரையாடல்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

summary

Ukrainian President Zelenskyy is set to meet US President Donald Trump today (July 28).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments