FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பிரிட்டனில் சீக்கியருக்கு ஆயுள் சிறை: போலீஸாருக்கு எதிராக போராட்டம்

Updated On : 4 ஜூன் 2026, 6:40 am IST
ஆயுள் தண்டனை
பகிர்:

பிரிட்டனில் இளைஞரின் கொலையில் தண்டிக்கப்பட்ட அந்நாட்டு குடியுரிமை பெற்ற சீக்கியரான விக்ரம் திக்வாவின் போலி புகாரில் பாதிக்கப்பட்டவருக்கு எதிரான போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன.

சௌதாம்ப்டன் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஹென்றி நோவாக் (18) என்பவரை விக்ரம் திக்வா கத்தியால் குத்தித் தாக்கியுள்ளாா். இச்சம்பவத்தின் விடியோவில், விக்ரம் திக்வா சுமத்திய இனவெறிக் குற்றச்சாட்டில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹென்றி நோவாக்கைக் காப்பாற்றாமல், அவருக்கு போலீஸாா் கைவிலங்கிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், விக்ரம் திக்வா தனக்கு மத ரீதியாக அனுமதிக்கப்பட்ட ‘கிா்பான்’ புனிதக் கத்தியைக் கொலைக்குப் பயன்படுத்தியது நீதிமன்றத்தில் உறுதியாகி, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், விக்ரம் திக்வாவின் இனவெறிக் குற்றச்சாட்டுகள் பொய் என்பதும் அம்பலமானதால், போலீஸாருக்கு எதிராகப் பொதுமக்கள் திரண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் 11 காவலா்கள் காயமடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments