புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
புதிய ஹெச் 1-பி விசாக்களுக்கு அதிபர் டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணத்தை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய ஹெச் 1-பி விசாக்களுக்கு அதிபர் டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணத்தை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் தனித்திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான புதிய ஹெச்-1பி விசாக்களுக்கு அதிபர் டிரம்ப் விதித்த 1,00,000 டாலர் கட்டணத்தை சட்டவிரோதமானது எனக் கூறி அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஹெச் 1-பி விசாக்களுக்கான கட்டணத்தைப் பெருமளவில் டிரம்ப் உயர்த்தியதை எதிர்த்து, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 20 தலைமை வழக்கறிஞர்கள் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில் அதற்கான தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கியது.
Advertisement
Advertisement
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்தாண்டு செப்டம்பரில் இந்தக் கட்டணத்தை அறிவித்தார். இது சட்டவிரோதமான வரி என்றும், வரிகளை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத்தின் உரிமையை இது பறிப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
"விசா வழங்க வசூலிக்கப்படும் கட்டணம் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், அந்தக் கட்டணத்தின் தன்மை அது ஒரு வரி என்பதையே காட்டுகின்றது" என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சொரோகின் குறிப்பிட்டார்.
2026 ஆம் நிதியாண்டில் அமெரிக்காவில் பணிபுரிய ஹெச் 1-பி விசாவுக்க்கு விண்ணப்பித்த 2,00,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களுக்கான பரிசீலனையை விரைவுபடுத்த 1,00,000 டாலர் கட்டணம் செலுத்தியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்தத் தகவல் வெளியான சில நாள்களிலேயே இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும், இக்கட்டணத்தை செலுத்துவோரின் விண்ணப்பங்கள் 15 நாள்களில் பரிசீலிக்கப்படுவதாகவும், சாதாரண விண்ணப்பங்களுக்கும் 7.5 மாதங்கள் வரை பரிசீலிக்க நேரமெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஹெச் 1 விசா என்பது அமெரிக்காவில் வசிப்பதற்கான தற்காலிக குடியுரிமை கொண்டது. அமெரிக்க நிறுவனங்கள் தனித்திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்த இந்த விசா வழங்கப்படுகிறது. இந்த வகையில் அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆண்டு தோறும் பத்து முதல் ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி வருகின்றன.