முகப்பு
உலகம்

ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை வெளியிட வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்

ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த தகவல்களை அந்நிறுவனங்களே வெளியிட வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்தது பற்றி...

Updated On : 23 ஜூன் 2026, 4:30 pm IST
செயற்கை நுண்ணறிவு. - பிரதிப்படம்
பகிர்:

செய்யறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த தகவல்களை அந்நிறுவனங்களே வெளியிட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐரோப்பாவின் பருவநிலை மாநாட்டில் அவர் பேசியதாவது:

செய்யறிவு நிறுவனங்கள், தாங்கள் உருவாக்கும் கார்பன் மாசுபாடு மற்றும் அவற்றின் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் நீர், நிலம் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும் இதுமாதிரியான சுற்றுச்சூழல் தொடர்புடைய விவகாரங்களில் நிறுவனங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.

செய்யறிவு நிறுவனங்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் விளைவுகள் குறித்த தரவுகள் சரியாக கிடைக்காததால், அரசாங்கங்களும் செயற்கை நுண்ணறிவை ஆதரிக்கும் தரவு மையங்களும் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன.

2030 ஆம் ஆண்டுக்குள், காற்று மற்றும் சூரியசக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொண்டு தங்களுடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த செய்யறிவு நிறுவனங்கள் உறுதியளிக்க வேண்டும்.

ஆகையால், செய்யறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த உண்மைகளை நிறுவனங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.

செய்யறிவு தரவு மையங்கள் உலகளாவிய மின்சார பயன்பாட்டில் அதிகமான பங்கை எடுத்துக்கொள்கின்றன. 2030 ஆம் ஆண்டுக்குள் இதன் மின்சார பயன்பாடு பலமடங்கு அதிகரிக்கும் என ஐ.நா. போன்ற அமைப்புகள் எச்சரிப்பது குறிப்பிடத்தக்கது.

summary

UN Secretary-General António Guterres stated on Tuesday (June 23) that the companies themselves must disclose information regarding the environmental impacts of artificial intelligence technology.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments