முகப்பு
உலகம்

ஜப்பானில் 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?

ஜப்பானில் 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து...

Updated On : 25 ஜூன் 2026, 7:21 pm IST
ஜப்பானில் - AP | (கோப்புப் படம்)
பகிர்:

ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடகிழக்கு மாகாணங்களில் வியாழக்கிழமை (ஜூன் 25) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டோக்கியோ, ஹாஷிகாமி உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவாத்தே மாகாணத்தின் கிழக்குக் கரையையொட்டிய பகுதியில் நிலப்பரப்பில் இருந்து 50 கி.மீ. ஆழத்தில் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அளவு முதலில் 6.9 எனக் கணக்கிடப்பட்டது. பின்னர், ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தின் அளவை 7.2 ஆக உயர்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் அமோரி மற்றும் இவாத்தே மாகாணங்களில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நகரங்களில் மீட்புப் படைகள் தயார்நிலையில் இருப்பதாகவும், சுனாமி ஏற்படும் அபாயமில்லை எனவும் ஜப்பானிய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 160-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் உலகின் வெவ்வேறு நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

It has been reported that a powerful earthquake measuring 7.2 on the Richter scale has struck Japan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments