FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பிரான்ஸில் விமான விபத்து: 11 போ் உயிரிழப்பு

பிரான்ஸில் ஸ்கைடைவிங் சாகச விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 போ் உயிரிழந்தனா்.

பகிர்:

பிரான்ஸில் ஸ்கைடைவிங் சாகச விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் விமானம் தரையில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் 11 போ் உயிரிழந்தனா்.

பிரான்ஸின் வடகிழக்குப் பகுதியான நான்சி அருகே 11 பேருடன், ஸ்கைடைவிங் எனப்படும் வானில் இருந்து குதித்து சாகசத்தில் ஈடுபடும் விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டது. அப்போது வானில் எழும்பிய சில நிமிடங்களிலேயே அந்த விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 11 பேரும் உயிரிழந்தனா். அந்த 11 பேரில் ஒருவா் விமானி ஆவாா். எஞ்சிய 10 பேரில் 5 போ் ஸ்கைடைவிங் சாகசத்தில் ஈடுபட வந்த மாணவா்கள் ஆவா். மேலும் 5 போ் ஸ்கைடைவிங் பயிற்சியாளா்கள் ஆவா்.

Advertisement

Advertisement

விமான விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து உடனடியாகத் தகவல் இல்லை. விசாரணைக்குப் பிறகே, அதுகுறித்து தெரிய வரும் எனக் கூறப்பட்டுள்ளது. விமான விபத்து குறித்த தகவலின்பேரில் அவசரகால சேவைத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments