பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி
பாகிஸ்தானில் பயணிகள் ரயிலைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் பயணிகள் ரயிலைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் குவெட்டா பகுதியில் உள்ள சமன் படக் ரயில் தண்டவாளம் அருகே ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து வாகனத்தைக் கொண்டு இன்று தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவல் கிடைத்ததும உள்ளூர் மக்கள், அவசரகாலக் குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த தாக்குதலால் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், அருகிலுள்ள கட்டடங்களின் ஜன்னல்களும் கண்ணாடிகளும் நொறுங்கியதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
மேலும் ரயில் தண்டவாளம் அருகில் இருந்த பல வீடுகளும் வாகனங்களும் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் ரயில் தடம் புரண்டதுடன் அதன் பெட்டி ஒன்று தீப்பிடித்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவித்தன. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பலூச் விடுதலை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதனிடைய தாக்குதலுக்குள்ளான ஜாஃபர் ரயில் பெஷாவருக்குப் புறப்படவிருந்ததாகக் கூறப்படுகிறது.
At least 25 people were killed on Sunday in a blast targeting a train carrying military personnel in Pakistan's southwestern province of Balochistan, AFP reported quoting a senior official.