FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!

அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வியடைந்தது பற்றி...

41 வினாடிகள் முன்பு
விவேக் ராமசுவாமி - AP
பகிர்:

அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட இந்திய அமெரிக்க தொழிலதிபரான விவேக் ராமசுவாமி தோல்வி அடைந்தார்.

இந்திய அமெரிக்கத் தொழிலதிபர் விவேக் ராமசுவாமி (39) கடந்தாண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு பட்டியலில் இருந்தார். இந்த நிலையில், டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றிபெற்ற நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசின் செயல்திறன் துறைக்கு எலான் மஸ்க்குடன் இணைந்து விவேக் ராமசுவாமி தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட விவேக் ராமசுவாமி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஏமி ஆக்டனிடம் தோல்வியைச் சந்தித்தார்.

Advertisement

Advertisement

இந்த தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விவேக் ராமசாமி பேசியதாவது:

”சில விஷயங்கள் ஒரு காரணத்திற்காகவே நடக்கின்றன என்று நான் நம்புகிறேன். கடவுளுக்கு ஒரு திட்டம் உள்ளது. நாம் அவருடைய கருவிகள். காலப்போக்கில், நம் மாகாணத்துக்கும், நம் நாட்டுக்கும் மிகச் சிறந்த நாள்கள் வரவிருக்கின்றன என்று நான் தொடர்ந்து நம்புகிறேன். மனித வரலாற்றிலேயே இதுதான் மிகச் சிறந்த நாடு” எனத் தெரிவித்தார்.

டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி, இடைக்கால தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், செனட் சபையில் பெரும்பான்மையை இழந்துள்ளது.

மேலும், பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கும் குடியரசுக் கட்சி தோல்வியின் விழும்பில் உள்ளது.

summary

Indian-origin Vivek Ramaswamy defeated in US election!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.