FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் அனுப்பிய ஈரான்!

முக்கிய நிபந்தனைகளுடன் அமெரிக்காவிடம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் அளித்தது குறித்து...

அமெரிக்காவுக்கு ஈரான் 7 நிபந்தனைகள் - சித்திரிப்பு
பகிர்:

அமெரிக்காவுக்கு 7 முக்கிய நிபந்தனைகளுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் அனுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ல் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால், பல்வேறு நாடுகளிலும் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு, பெட்ரோல் - டீசல் விலை அதிகரித்தது.

Advertisement

Advertisement

உலகளாவிய வர்த்தகம் பாதிக்கப்பட்டதால் ஈரான் - அமெரிக்கா இடையேயான போரை நிறுத்திக் கொள்ளுமாறு பல நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, அமெரிக்காவின் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஈரான் போர்தான் காரணம் என அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், அமெரிக்காவிடம் 7 நிபந்தனைகளை வலியுறுத்தி, நேரடியாக அல்லாமல் கத்தார் வழியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை அனுப்பியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெபனான் உள்பட அனைத்து பகுதிகளிலும் போர் நடவடிக்கைகளை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருதல், ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகையை நீக்குதல், ஈரான் மீதான தடையை நீக்குதல், இஸ்லாமிய குடியரசின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தல், பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பைக் குறைத்தல், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு, ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருதல் உள்ளிட்ட 7 நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், 7 நிபந்தனைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

ஈரானின் 7 நிபந்தனைகளையும் அமெரிக்கா ஏற்கும்வரையில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என சமீபத்தில் ஈரானின் பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் தெரிவித்திருந்தார்.

summary

Iran sent nuclear proposal to the US via Qatar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.