பராகுவேவின் புதிய அதிபராக பெட்ரோ அலியானா பதவியேற்பு! முன்னாள் அதிபருக்கு வீட்டுக் காவல்!
பராகுவே நாட்டின் புதிய அதிபராக பெட்ரோ அலியானா பதவியேற்பு...
தென் அமெரிக்க நாடான பராகுவேவின் புதிய அதிபராக பெட்ரோ அலியான பதவியேற்றுக்கொண்டார்.
பராகுவேவின் அதிபராகப் பதவி வகித்து வந்த சாண்டியாகோ பெனாவுக்குத் தொடர்புடைய வங்கியில் ஏற்பட்ட நெருக்கடியால், அந்நாட்டின் பெரும்பாலான மக்கள் தங்களின் வங்கிக் கணக்குகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த விவகாரத்தில், சாண்டியாகோவுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், பராகுவேவின் செனட் அவையில் அவரை அதிபர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
செனட் அவையிலுள்ள மொத்தம் 45 செனட்டர்களில் 44 பேர் சாண்டியாகோ பெனாவை அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு வாக்களித்துள்ளனர். இதையடுத்து, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதுடன், துணை அதிபராகப் பதவி வகித்து வந்த பெட்ரோ அலியானா புதிய அதிபராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பராகுவே நாட்டின் புதிய அதிபராக பெட்ரோ அலியானா வெள்ளிக்கிழமை (நவ. 6) மாலை பதவியேற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசின் ஆதரவுபெற்ற முன்னாள் அதிபர் சாண்டியாகோ பெனா உடனடியாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அவரால் ஏற்பட்ட இழப்புகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டுமென வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.