FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஹௌதி படையினருடன் தீவிரமடையும் மோதல்: சிரியா உதவியை நாடும் சவுதி அரேபியா!

ஹௌதி படையினருடன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் சிரியா உதவியை சவுதி அரேபியா நாடியுள்ளது.

52 வினாடிகள் முன்பு
சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உடன் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷரா. - AP
பகிர்:

ஹௌதி படையினருடன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் சிரியா உதவியை சவுதி அரேபியா நாடியுள்ளது.

சிரியா தனது ராணுவப் படையினரை சவுதி அரேபியாவிற்கு அனுப்பத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியப் படையினர் சவுதியின் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டு ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹௌதி படையினருக்கு எதிராகப் போரிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக சிரியாவின் ராணுவ ஆலோசகர்கள் சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை ராணுவப் படையினர் அனுப்பபடவில்லை என்று சிரிய அதிகாரிகள் ஆங்கில செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக, கருத்து தெரிவிக்குமாறு கேட்டபோது சவுதி அரேபிய அதிகாரிகள் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர், ஏமனில் உள்ள ஹௌதி படையினருக்கும், சவுதி அரேபியா அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது. ஹௌதிகள் சவுதி மீது நேரடியாகவும், உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விதமாகவும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பிப்ரவரி மாதம் அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதால் பிராந்தியத்தில் மோதல் ஏற்பட்டது. அதில், இது புதிய முனை மோதலாக உருவெடுத்துள்ளது.

உள்நாட்டுப் போர்களில் அனுபவம் வாய்ந்த படைகளைக் கொண்டுள்ள சிரியா, இதுவரை இந்தப் போரில் நேரடியாக ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தது. சவுதியிடம் அமெரிக்கா வழங்கிய போர் விமானங்களும் ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்களும் இருந்தாலும், ஹௌதி படையினரை அவர்களால் தோற்கடிக்க முடியவில்லை.

சவுதி அரேபியாவின் ஆதரவு நாடுகள் ஹௌதிக்களுக்கு எதிரான போரில் ராணுவப் படைகளை அனுப்பத் தயங்கும் நிலையில், சிரியா சவுதிக்கு உதவ முன்வந்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது, அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி நிதியுதவி வழங்கியது. அதேநேரம், போருக்குப் பிந்தைய சிரியாவின் மறுசீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிதியுதவி வழங்குவதாகவும் சவுதி உறுதி அளித்துள்ளது.

summary

Escalating conflict with Houthi forces: Saudi Arabia seeks assistance from Syria.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.