யேமனில் சௌதி படைகள் தாக்குதல்! பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!
யேமன் தலைநகர் மீதான சௌதி படைகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாக ஹௌதிகள் அறிவிப்பு...
யேமனின் சனா மாகாணத்தின் மீது சௌதி அரேபியாவின் படைகள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டதாக, ஹௌதி படை அறிவித்துள்ளது.
யேமனில், ஹௌதி கிளர்ச்சிப்படைக்கும், சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் வெடித்துள்ளது. மேலும், சௌதி அரேபியாவின் மீதும் ஹௌதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், சனா மாகாணத்தின் அல்-ஷரியா பகுதியில் சௌதி படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாக, ஹௌதி படை இன்று (நவ. 7) அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனக் கூறப்படும் நிலையில், சுமார் 30 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சௌதியின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் யேமனின் அரசுப்படைகள் ஹௌதிகளுக்கு எதிராக 40,761 ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன.
மேலும், இந்த நடவடிக்கைகள் மூலம், சுமார் 20,000 ஹௌதி வீரர்கள் கொல்லப்பட்டோ, படுகாயமடைந்தோ அல்லது வேறு ஏதேனும் வழிகளிலிலோ போர்க்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.