FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சௌதியின் எண்ணெய் வயல் மீதான தாக்குதலில் இந்தியர் படுகாயம்! தூதரகம் அறிவிப்பு!

சௌதியின் அராம்கோ ஷைபா எண்ணெய் வயல் மீதான தாக்குதலில் இந்தியர் ஒருவர் படுகாயம்...

சௌதியின் அராம்கோ ஷைபா எண்ணெய் வயல்... - கோப்புப் படம் | AP
பகிர்:

சௌதி அரேபியாவின் அராம்கோ ஷைபா எண்ணெய் வயலின் மீதான ட்ரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக, இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

சௌதி அரேபியாவின் அராம்கோ ஷைபா எண்ணெய் வயலின் மீது கடந்த புதன்கிழமை (அக். 21) ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், நேபாளம் மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

இத்துடன், இந்தத் தாக்குதலில், இந்தியர் ஒருவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சௌதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சகம் அறிவித்திருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஷைபா எண்ணெய் வயலின் மீதான தாக்குதலில் இந்தியர் படுகாயமடைந்ததை, சௌதியில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று (அக். 22) உறுதி செய்துள்ளது. மேலும், படுகாயமடைந்த இந்தியருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம் உடனான எல்லையில் அமைந்திருக்கும் சௌதி அரசின் அராம்கோ நிறுவனத்தின் ஷைபா எண்ணெய் வயலைக் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்தத் தாக்குதலை யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு யார் காரணம் என்பது குறித்து சௌதி அரசின் தரப்பிலிருந்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

யேமனில் சௌதி அரேபியாவின் ஆதரவுபெற்ற அரசுப்படைகளுக்கும், ஹௌதிகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் வெடித்துள்ளது.

இதையடுத்து, சௌதியின் விமான நிலையங்கள், எண்ணெய்க் கட்டமைப்புகள் ஆகியவற்றைக் குறிவைத்து ஹௌதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

An Indian national has been seriously injured in a Houthi attack on the Aramco Shaybah oil field in Saudi Arabia, the Indian Embassy has announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments