FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஏமனில் சிக்கியிருந்த 19 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்பு!

ஏமனில் சிக்க்கியிருந்த இந்திய மாலுமிகளை இந்தியத் தூதரகம் மீட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஏமனில் சிக்கியிருந்த 19 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்பு
பகிர்:

ஏமனில் சிக்க்கியிருந்த இந்திய மாலுமிகளை இந்தியத் தூதரகம் மீட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஏமனின் ஹோடைடா மற்றும் சனா ஆகிய நகரங்களில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியிருந்த 19 இந்திய மாலுமிகளை வெற்றிகரமாக மீட்டதாக ஏமனில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்தியத் தூதரகம், "ஏமனில் உள்ள இந்தியத் தூதரகம், கடந்த இரு வாரங்களாக ஹோடைடா மற்றும் சனாவில் சிக்கியிருந்த 19 இந்திய மாலுமிகளை வெற்றிகரமாக மீட்டுள்ளது. அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாகவும், நல்ல உடல்நலத்துடனும் உள்ளனர். அவர்கள் இந்தியா திரும்புகிறார்கள். இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் தூதரகம் நன்றியைத் தெரிவிக்கிறது" என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களில் இதுவரை 23 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். இதில் 15 இந்திய மாலுமிகளும் அடங்குவர்.

அதேநேரம், கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 5 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இருவரை இன்னும் காணவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சில நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் இந்திய மாலுமி ஒருவர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

summary

19 Indian sailors stranded in Yemen rescued safely.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.