இந்தியா-இலங்கை இடையே அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தை அதிகரிக்க முடிவு
இந்தியா-இலங்கை இடையே கூட்டுறவு வலையமைப்புகள் மூலம் உணவுப் பொருள்கள் உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தை அதிகரிக்க முடிவெடுத்திருப்பதாக இந்தியத் தூதரகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்தியா-இலங்கை இடையே கூட்டுறவு வலையமைப்புகள் மூலம் உணவுப் பொருள்கள் உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தை அதிகரிக்க முடிவெடுத்திருப்பதாக இந்தியத் தூதரகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வெளிநாடுகளுக்கான இந்திய கூட்டுறவு சங்கத்தின் கிளை அமைப்பான தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) இலங்கை கூட்டுறவு அமைப்புடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்கீழ் கூட்டுறவு வலையமைப்புகள் மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு உணவுப் பொருள்கள் உள்பட அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தை அதிகரித்து உணவு பாதுகாப்பு வலுப்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் இலங்கையில் உணவுப் பற்றாக்குறை குறைக்கப்பட்டு பொருள்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
Advertisement
Advertisement
இதுதவிர ஒப்பந்தத்தின்கீழ் சந்தை தகவல் பரிமாற்றம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் எண்ம தளங்களிலும் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படவுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.