FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

செறிவூட்டப்பட்ட யுரேனியம் நாட்டைவிட்டு வெளியேறாது: ஈரான் திட்டவட்டம்

ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு துகள் கூட நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படாது என அந்நாட்டின் பாதுகாப்புத் தலைவா் மொஹ்சின் ரெஸாய் திட்டவட்டம்

12 நவம்பர் 2026, 3:41 am
மொஹ்சின் ரெஸாய்
பகிர்:

‘ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு துகள் கூட நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படாது’ என்று அந்நாட்டின் பாதுகாப்புத் தலைவா் மொஹ்சின் ரெஸாய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

லெபனான் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறுகையில், ‘ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்நாட்டிலேயே இருக்கும். அணுசக்தியால் இயங்கும் கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்களை வடிவமைக்க இந்த மூலப்பொருள்கள் தேவைப்படுவதால், அவற்றை நாங்களே பயன்படுத்துவோம் என்பதை ரஷியாவிடமும் தெளிவுபடுத்தியுள்ளோம்’ என்று குறிப்பிட்டாா்.

சா்வதேச அணுசக்தி முகமையின் முந்தைய மதிப்பீட்டின்படி, ஈரானிடம் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட 440.9 கிலோ யுரேனியம் கையிருப்பில் இருந்தது. ஆயுத நிலைக்கு (90 சதவீதம்) நெருக்கமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இதனிடையே, அணுசக்தி திட்டம் குறித்து முன்மொழிவு ஒன்றையும் கத்தாா் மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.