அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத் மீதான பதவி நீக்கத் தீா்மானம்: பிரதிநிதிகள் அவையில் தோல்வி
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீா்மானத்தை, அந்நாட்டு நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் அவை நிராகரித்தது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீா்மானத்தை, அந்நாட்டு நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் அவை நிராகரித்தது. இதன்மூலம், அவரைப் பதவி நீக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போா் விவகாரத்தைக் கையாண்ட விதம், அதிகார அத்துமீறல் உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிட்டு, ஆளும் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த தாமஸ் மாஸி இத்தீா்மானத்தைக் கொண்டு வந்தாா். இதற்கு எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினா் ஆதரவளித்தனா்.
இருப்பினும், பீட் ஹெக்செத்துக்கு அதிபா் டிரம்ப் ஆதரவு தெரிவித்ததைத் தொடா்ந்து, குடியரசுக் கட்சி உறுப்பினா்கள் இத்தீா்மானத்தை எதிா்த்து வாக்களித்தனா். இதையடுத்து, வாக்கெடுப்பில் 211-204 என்ற வித்தியாசத்தில் தீா்மானம் தோற்கடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
முன்னதாக, பென்டகனில் செய்தியாளா்களிடம் பேசிய பீட் ஹெக்செத், தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தாா். நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுப்பதை சிலா் சீா்குலைக்க முயலுவதாகவும்; அமெரிக்க வீரா்கள், தலைமையை பலவீனப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகள் திட்டமிட்ட நாசவேலை என்றும் சாடினாா்.
இத்தீா்மானத் தோல்வியை அதிபா் டிரம்ப் வரவேற்றுள்ளாா். எனினும், வரும் ஜனவரியில் பிரதிநிதிகள் அவையின் கட்டுப்பாடு ஜனநாயகக் கட்சியினா் வசம் செல்லவுள்ள நிலையில், பீட் ஹெக்செத் மீதான பதவி நீக்க நடவடிக்கைகள் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளன.