ஈரானுடன் ஒப்பந்தம் தேவையில்லை; அவர்களின் பணம் நம்மிடம் உள்ளது! - டிரம்ப் பதிவு!
ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு...
ஈரான் உடன் அமைதி ஒப்பந்தம் தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது கடந்த பிப்.28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே போர் வெடித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் போரில், அமெரிக்காவுக்கு எதிராக வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியும், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியும் ஈரானிய படைகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் தேவையில்லை என அதிபர் டிரம்ப் இன்று (நவ. 12) பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“ஈரானுடன் நாம் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யத் தேவையில்லை. அந்தக் காலம் எப்போதோ முடிந்துவிட்டது. அவர்களின் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் பணம் இப்போது நம்மிடம் உள்ளது.
அத்துடன், அவர்களின் நீரிணையும் (ஹோர்முஸ்) நமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியின் பெரும் தோல்விக்கு ஈரான் உடனான போர்தான் காரணம் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.