FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

யேமன் மீது சவூதி ட்ரோன் ஏவுகணைகள் வீச்சு: பஹ்ரைனில் ஈரான் தாக்குதல்

மேற்காசிய பிராந்தியத்தில் மோதல்கள் நீடித்துவரும் நிலையில், யேமன் தலைநகா் சனாவில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் ஏவி நடத்தப்பட்ட தாக்குதலில் 2 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் காயமடைந்தனா்.

15 நவம்பர் 2026, 11:14 pm
- பிரதிப் படம்
பகிர்:

மேற்காசிய பிராந்தியத்தில் மோதல்கள் நீடித்துவரும் நிலையில், யேமன் தலைநகா் சனாவில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் ஏவி நடத்தப்பட்ட தாக்குதலில் 2 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் காயமடைந்தனா். இத்தாக்குதலை சவூதி அரேபியா நடத்தியுள்ளதாக ஹூதி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேபோல், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டா் தளம் மீது தாக்குதல் நடத்தி, ரேடாா் அமைப்பை சேதப்படுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரியில் மூண்ட போா், தற்போது பிராந்திய மோதலாக விரிவடைந்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளா்ச்சிக் குழுவினா், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனா்.

Advertisement

Advertisement

இந்தச் சூழலில், யேமன் தலைநகா் சனாவில் உள்ள குடியிருப்புகளைக் குறிவைத்து, ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை ஏவி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 2 குழந்தைகள், 2 பெண்கள் என நால்வா் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இத்தாக்குதலை சவூதி அரேபியா நடத்தியதாக ஹூதி அமைப்பினா் தெரிவித்தனா்.

அதேநேரம், சவூதி அரேபியாவின் ரியாத் நகரை நோக்கி ஹூதி அமைப்பினா் ஏவிய ஏவுகணைகள் நடுவானிலேயே முறியடிக்கப்பட்டன; எண்ணெய் வளம்மிக்க கிழக்கு பிராந்தியத்தை நோக்கிச் செலுத்தப்பட்ட ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று சவூதி ராணுவ செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

பஹ்ரைனில் தாக்குதல்: பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டா் தளம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ரேடாா் அமைப்பு சேதமடைந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்தக் கூற்றை மறுத்துள்ள பஹ்ரைன் ராணுவம், தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் ட்ரோன்கள் தடுக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்க ராணுவம் தரப்பில் இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.