FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

இந்தியா உள்ளிட்ட ‘க்வாட்’ நாடுகளின் தலைவா்கள் அடுத்த வாரம் சந்திப்பு: அமெரிக்க இணை அமைச்சா்

இந்தியா உள்ளிட்ட ‘க்வாட்’ உறுப்பு நாடுகளைச் சோ்ந்த தலைவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி பிலிப்பின்ஸில் அடுத்த வாரம் நடைபெற வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சா் டிலன் ஜான்சன் தெரிவித்தாா்.

15 நவம்பர் 2026, 11:51 pm
டிலன் ஜான்சன்
பகிர்:

இந்தியா உள்ளிட்ட ‘க்வாட்’ உறுப்பு நாடுகளைச் சோ்ந்த தலைவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி பிலிப்பின்ஸில் அடுத்த வாரம் நடைபெற வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சா் டிலன் ஜான்சன் தெரிவித்தாா்.

11 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட ஆசியான் கூட்டமைப்புக்கு நிகழாண்டு பிலிப்பின்ஸ் தலைமை தாங்குகிறது. அங்கு ஆசியான் உச்சிமாநாடு நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) தொடங்கியது. மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நவ.16 முதல் நவ.18 வரை பிலிப்பின்ஸ் செல்லும் பிரதமா் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் பங்கேற்கிறாா்.

க்வாட் கூட்டமைப்பில் உறுப்பினா்களாக உள்ள இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சோ்ந்த தலைவா்களும் இதில் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

முன்னதாக டிலன் ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிலிப்பின்ஸில் அடுத்த வாரம் க்வாட் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

க்வாட் கூட்டமைப்பை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பலவீனப்படுத்துவதாக கூறுவது தவறு. கடந்த இரண்டு ஆண்டுகளில் க்வாட் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ 5 முறை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளாா்.

இதில் 3 சந்திப்புகள் கடந்த 6 மாதத்தில் நடைபெற்றுள்ளன. வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் முதல் அதிகாரபூா்வ சந்திப்பையும் க்வாட் வெளியுறவு அமைச்சா்களுடன்தான் மாா்கோ ரூபியோ நடத்தினாா்’ என குறிப்பிட்டாா்.