ரூ. 51,500 கோடி நன்கொடை அளித்த தொழிலதிபர் வாரன் பஃபெட்!
தொழிலதிபர் வாரன் பஃபெட் ரூ. 51,500 கோடி நன்கொடை அளித்தது பற்றி...
உலகின் முன்னணி முதலீட்டாளரும் அமெரிக்க தொழிலதிபருமான வாரன் பஃபெட், ரூ. 51,500 கோடி மதிப்பிலான பங்குகளை நான்கு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
96 வயதான வாரன் பஃபெட், பொ்க்ஷைா் ஹாத்வே நிறுவனத்தில் உள்ள 6,150 கிளாஸ் ஏ பங்குகளை 92,25,000 கிளாஸ் பி பங்குகளாக மாற்றி, அவற்றில் 36,90,000 பங்குகளை சூசன் தாம்சன் பஃபெட் அறக்கட்டளைக்கும், தனது மூன்று பிள்ளைகளான சூசி, ஹோவர்ட் மற்றும் பீட்டர் பஃபெட் ஆகியோரால் நடத்தப்படும் ஷெர்வுட் அறக்கட்டளை, ஹோவர்ட் ஜி. பஃபெட் அறக்கட்டளை மற்றும் நோவோ அறக்கட்டளை ஆகியவற்றுக்கு தலா 18,45,000 பங்குகளையும் வழங்கினார்.
Advertisement
Advertisement
இந்த நன்கொடைகளுக்குப் பிறகு, பொ்க்ஷைா் ஹாத்வேவின் கௌரவத் தலைவராக இருக்கும் வாரன் பஃபெட்டுக்கு இன்னும் 1,82,140 கிளாஸ் ஏ பங்குகளை வைத்திருக்கிறார். அதன் மதிப்பு சுமார் 162 பில்லியன் டாலர் (ரூ. 151 லட்சம் கோடி) ஆகும்.
பஃபெட்டின் நன்கொடைகள்
ஃபோர்ப்ஸின் 2026 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் மிகப்பெரிய டாப் 25 நன்கொடையாளர்கள் பட்டியலில் வாரன் பஃபெட் முதலிடத்தில் உள்ளார்.
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள், பஃபெட் தனது மொத்த நிகர சொத்து மதிப்பில் 32 சதவிகிதமான 68.3 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பின்படி ரூ. 6.39 லட்சம் கோடி) பல்வேறு நற்பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியிருந்தார். தற்போது வழங்கியுள்ள நன்கொடை தொகை இத்துடன் சேர்க்கப்படவில்லை.