முகப்பு
உலகம்

புதைபடிவ எரிபொருள் விவகார முரண்பாடு: ஒப்பந்தமின்றி முடிந்த பருவநிலை மாநாடு

புதைபடிவ எரிபொருள் விவகார முரண்பாடு: ஒப்பந்தமின்றி முடிந்த பருவநிலை மாநாடு

22 நவம்பர் 2026, 11:00 pm
புதைபடிவ எரிபொருள் விவகார முரண்பாடு: ஒப்பந்தமின்றி முடிந்த பருவநிலை மாநாடு
- AP
பகிர்:

புதைபடிவ எரிபொருள் விவகாரத்தில் ஒருமித்த உடன்பாடு எட்டப்படாததையடுத்து, துருக்கியில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை உச்சிமாநாடு-31 ஒப்பந்தமின்றி நிறைவடைந்தது.

துருக்கி-ஆஸ்திரேலியா இணைத் தலைமையேற்று நடத்திய இந்த மாநாடு துருக்கியின் அன்டாலியா நகரில் நவ.9-ஆம் தேதி தொடங்கி நவ.22-ஆம் தேதி வரை நடைபெற்றது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிா்கொள்வது, புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றான பிற முன்னெடுப்புகளை மேற்கொள்வது உள்ளிட்ட பருவநிலை சாா்ந்த நடவடிக்கைகள் தொடா்பான பேச்சுவாா்த்தைகள் நடத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஐ.நா. பருவநிலை உச்சிமாநாடு விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் முன்மொழியப்படும் விவகாரங்கள் உறுப்பு நாடுகளால் ஒருமித்த நிலைப்பாடுடன் ஏற்றுக்கொள்வது வழக்கம்.

ஆனால், புவி வெப்பமயமடைவதற்கு முக்கிய காரணமாக விளங்கும் புதைபடிவ எரிபொருள் குறித்த தகவல்களின்றி பருவநிலை உச்சிமாநாடு-31-இன் இறுதி முன்மொழிவை துருக்கி-ஆஸ்திரேலியா இணைந்து வெளியிட்டதாகக் கூறி அதை 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் மற்றும் மேலும் சில நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன.

Advertisement

Advertisement

இறுதி முன்மொழிவு ஆவணத்தில் புதைபடிவ எரிபொருள்கள் குறித்த தகவல்கள் இடம்பெறக்கூடாது என ரஷியாவும் சவூதி அரேபியாவும் அளித்த அழுத்தத்தால் துருக்கி-ஆஸ்திரேலியாஅதை குறிப்பிடவில்லை. இதனால் இந்த மாநாடு முக்கிய ஒப்பந்தங்கள் ஏதுமின்றி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.