முகப்பு

ட்ரோன் தாக்குதல்! 2 நாள்களாக தீப்பற்றி எரியும் ரஷிய சரக்குக் கப்பல்!

ட்ரோன் தாக்குதலால் ரஷிய சரக்குக் கப்பல் தீப்பற்றி எரிந்தது குறித்து...

5 வினாடிகள் முன்பு
ட்ரோன் தாக்குதல்! 2 நாள்களாக தீப்பற்றி எரியும் ரஷிய சரக்குக் கப்பல்!
ஃபின்லாந்து வளைகுடா பகுதியில் தாக்குதலுக்குள்ளான ரஷிய சரக்குக் கப்பல் - எக்ஸ்
பகிர்:

பால்டிக் கடலில் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய ரஷிய சரக்குக் கப்பலில் 2 நாள்களாகத் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால்டிக் கடலில் சென்ற ரஷியாவின் ஸ்பார்டா எனும் சரக்குக் கப்பல் மீது கடந்த சனிக்கிழமை (நவ. 21) இரவு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தக் கப்பல் நீரோட்டத்தில் நகர்ந்து தற்போது ஃபின்லாந்து நாட்டின் கடல்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனின் படைகள் நடத்தியதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலால், அந்தச் சரக்குக் கப்பலில் தீப்பற்றியதாகவும், உடனடியாகக் கப்பலில் இருந்த 16 மாலுமிகளை மற்றொரு ரஷிய கப்பல் மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மீட்புக் கப்பல்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ரஷிய கப்பலின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷியாவின் வடமேற்கு கடலோரப் பகுதியான லெனின்கிராட் நகரத்தைக் குறிவைத்து கடந்த சில மாதங்களாக, உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்தத் தாக்குதலில் சில ட்ரோன்கள் அருகிலுள்ள நேட்டோ நாடுகளின் எல்லைக்குள் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ரஷியாவின் கலினின்கிராட் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த ஸ்பார்டா கப்பல் மீது கோக்லாண்ட் தீவுக்கு மேற்கே இருக்கும் சர்வதேச கடல்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக, ஃபின்லாந்து ராணுவம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Russian cargo ship has caught fire after being struck by a drone in the Baltic Sea.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.