முகப்பு

ஹோர்முஸ் நீரிணையில் நீச்சல்! 56 வயது வீரரின் சாகச விடியோ வைரல்!

பதற்றம் நிறைந்த ஹோர்முஸ் நீரிணையில் 56 வயது வீரர் நீச்சலடித்தது குறித்து...

ஹோர்முஸ் நீரிணையில் நீச்சல்! 56 வயது வீரரின் சாகச விடியோ வைரல்!
ஹோர்முஸ் நீரிணையில் நீந்தும்போது தாக்குதலால் பற்றி எரியும் எரிவாயுக் கப்பல் / லூயிஸ் பக் - எக்ஸ் | Lewis Pugh
பகிர்:

பிரிட்டனைச் சேர்ந்த நீச்சல் வீரர், ஹோர்முஸ் நீரிணையில் நீச்சலடித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

போரினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஹோர்முஸ் நீரிணையில் நீச்சலடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த நீச்சல் வீரர் லூயிஸ் பக். 56 வயதான இவர், கடல்வாழ் உயிரினங்களுக்கான ஐ.நா. ஆதரவாளராக உள்ளார். உலகில் உள்ள அனைத்து கடல்களிலும் நீண்ட தூரம் நீச்சலடித்து பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஈரான் - அமெரிக்கா மோதல் மற்றும் போரினால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியுள்ள ஹோர்முஸ் நீரிணையில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு நீச்சல் அடித்து லூயிஸ் சாதனை படைத்துள்ளார்.

ஓமன் நாட்டின் தீபகற்ப முச்சந்தியில் தொடங்கி ஹோர்முஸ் முனையைச் சுற்றி, பகுதி பகுதியாக பிரித்து 3 நாள்களில் மொத்தம் ஆறரை மணி நேரம் நீச்சலடித்துள்ளார்.

போரினால் நாடுகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு, டால்பின்கள், கடல் ஆமைகள், பவளப் பாறைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த சாகசத்தை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

summary

Swimming in the Strait of Hormuz Viral video of a 56-year-old man’s daring feat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.