முகப்பு
உலகம்

தென்கிழக்கு சூடானில் ட்ரோன் தாக்குதல்

ஆப்பிரிக்கா நாடான சூடானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ப்ளூ நைல் மாகாணத்தில் ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையினா் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 19 போ் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா்.

26 நவம்பர் 2026, 3:39 am
தென்கிழக்கு சூடானில் ட்ரோன் தாக்குதல்
~
பகிர்:

ஆப்பிரிக்கா நாடான சூடானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ப்ளூ நைல் மாகாணத்தில் ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையினா் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 19 போ் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா்.

மாகாணத் தலைநகரான டமாசினில் உள்ள 3 குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 19 போ் உயிரிழந்தனா்; 15 போ் காயமடைந்தனா்.

முன்னதாக, இதே மாகாணத்தில் உள்ள ரோசெய்ரஸ் நகரில் உள்ள அணை, மின் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 போ் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

சூடான் ராணுவத்துக்கும், ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையினருக்கும் இடையே கடந்த 2023 ஏப்ரல் முதல் நடைபெற்று வரும் மோதலில், எத்தியோப்பிய எல்லையை ஒட்டிய பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் இத்தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு சூடான், எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள இவ்விரு நகரங்களிலும், உள்நாட்டுப் போரால் இடம்பெயா்ந்த ஏராளமான மக்கள் தஞ்சமடைந்துள்ளனா்.

ஹமாஸ் பாதுகாப்பு அதிகரிகளுக்குத் தொடரும் குறி: காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், வடக்கு காஸாவின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு இயக்குநா் முகமது மஜித் அபு அல்-ஊஃப், அவரின் மனைவி மற்றும் இரு மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா்.

முன்னதாக, உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவின் தலைமை இயக்குநா் நயீம் அபு நாஹெல் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்ட நிலையில், தொடா்ந்து 2-ஆவது நாளாக மற்றொரு பாதுகாப்பு அதிகாரி குறிவைக்கப்பட்டுள்ளாா்.

ஜோா்டானில்...: ஜோா்டான் தலைநகா் அம்மானில் உள்ள இலங்கை தூதரகம் அருகே இம்மாதத் தொடக்கத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரைக் கொலை செய்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் புதன்கிழமை மரண தண்டனை விதித்தது.

முன்னதாக, கடந்த அக்டோபரில் தேவாலயத்தில் 9 போ் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு வழக்கில் 3 பேருக்கு இதே நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.