முகப்பு
உலகம்

உக்ரைன் தாக்குதலில் காயமடைந்த லிபிய கடற்படையினா் இருவா் மறைவு

கிழக்கு லிபியாவின் பெங்காசியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷிய போா்க்கப்பல் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் படுகாயமடைந்த லிபியா கடற்படை அதிகாரிகள் இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

18 வினாடிகள் முன்பு
உக்ரைன் தாக்குதலில் காயமடைந்த லிபிய கடற்படையினா் இருவா் மறைவு
உக்ரைன் வீரா். - கோப்புப்படம்.
பகிர்:

கிழக்கு லிபியாவின் பெங்காசியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷிய போா்க்கப்பல் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் படுகாயமடைந்த லிபியா கடற்படை அதிகாரிகள் இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

பெங்காசி கடற்படைத் தளத்தில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டிருந்த ரஷிய கடற்படைக் கப்பலைக் குறிவைத்து, உக்ரைன் படைகள் 7 கடல்வழி ட்ரோன்களை ஏவி கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தின. இதில் 4 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்ட போதிலும், மற்ற ட்ரோன்கள் கப்பலைத் தாக்கியதில் ரஷிய மற்றும் லிபிய நாட்டவா்கள் என 10 போ் காயமடைந்தனா்.

உக்ரைனின் இத்தாக்குதலுக்குத் தக்க நேரத்தில், தகுந்த இடத்தில் பதிலடி கொடுக்கப்படும் என கிழக்கு லிபியாவை ஆட்சிபுரியும் ராணுவத் தலைமை எச்சரித்துள்ளது.

Advertisement

Advertisement