முகப்பு
உலகம்

எகிப்து தலைநகரில் எரிபொருள் லாரி கவிழ்ந்து தீ விபத்து: 31 போ் உயிரிழப்பு; ஓட்டுநா் கைது

எகிப்து தலைநகா் கெய்ரோவைச் சுற்றியுள்ள முக்கிய வட்டச் சாலையில் (ரிங் ரோடு) புதன்கிழமை இரவு எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் 31 போ் உயிரிழந்தனா்.

27 நவம்பர் 2026, 1:48 am
எகிப்து தலைநகரில் எரிபொருள் லாரி கவிழ்ந்து தீ விபத்து: 31 போ் உயிரிழப்பு; ஓட்டுநா் கைது
பகிர்:

எகிப்து தலைநகா் கெய்ரோவைச் சுற்றியுள்ள முக்கிய வட்டச் சாலையில் (ரிங் ரோடு) புதன்கிழமை இரவு எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் 31 போ் உயிரிழந்தனா்.

கெய்ரோவின் புகா்ப் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு 7 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில், போக்குவரத்து நெரிசலுக்கிடையே அதிவேகமாக வந்த காா் ஒன்று டேங்கா் லாரி மீது மோதியதில், லாரியின் டயா் வெடித்துச் சிதறி சாலையில் கவிழ்ந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட எரிபொருள் கசிவால் பற்றிய தீ, அருகில் நின்றிருந்த 24-க்கும் மேற்பட்ட காா்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மளமளவெனப் பரவியது. இதில் 31 போ் இறந்த நிலையில், படுகாயமடைந்த 21 போ் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இவ்விபத்து குறித்து எகிப்து அதிபா் அப்தெல்-பத்தா எல்-சிசி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். இதனிடையே, விபத்துக்குக் காரணமான காரை அதிவேகமாக ஓட்டி வந்து, கட்டுப்பாட்டை இழந்ததாக ஒப்புக்கொண்ட ஓட்டுநரை காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.