ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா!
ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் மொஹ்சென் பக்னெஜாத் திடீரென ராஜிநாமா செய்திருப்பது பற்றி...
ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் மொஹ்சென் பக்னெஜாத் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
இதையடுத்து அரசுக்கு சொந்தமான தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் போவர்ட் இடைக்கால அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ராஜிநாமா செய்த மொஹ்சென் பக்னெஜாத், 2024 முதல் ஒபெக் உறுப்பு நாட்டின் எண்ணெய் அமைச்சராக இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் அலுவலகத்தின் தகவல் தொடர்பு துணைத் தலைவர் மெஹ்தி தபதபாயி அரசுத் தொலைக்காட்சியிடம் கூறுகையில், பக்னெஜாத் தனிப்பட்ட காரணங்களுக்காக நீண்ட காலத்திற்கு முன்பே ராஜிநாமா செய்தார். பக்னெஜாத்தின் தொடர் வற்புறுத்தலால் அவரது ராஜிநாமாவை அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
பக்னெஜாத் ராஜிநாமா செய்திக்கு முன்பு, நாங்கள் விற்ற எண்ணெய்க்கான வருவாய் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, அது தொடரும் என்று கூறியதாக அரசு ஊடகம் தெரிவித்திருந்தது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏழு மாதங்களாக நடந்து வரும் போரினால் நாட்டின் பொருளாதாரத்தின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் பக்னெஜாத் ராஜிநாமா செய்துள்ளார்.
Iran’s Oil Minister Mohsen Paknejad has resigned for personal reasons, and Hamid Bovard, chief executive of the government-owned National Iranian Oil Company, will be acting minister, state media said on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.