நைஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து
தெற்கு நைஜீரியாவில் 25 பயணிகள், 7 விமானப் பணியாளா்கள் என மொத்தம் 32 பேருடன் சென்ற ராணுவ விமானம்
ஒண்டோ (நைஜீரியா): தெற்கு நைஜீரியாவில் 25 பயணிகள், 7 விமானப் பணியாளா்கள் என மொத்தம் 32 பேருடன் சென்ற ராணுவ விமானம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.
நைஜீரியாவின் வா்த்தகத் தலைநகரான லாகோஸுக்கு வழக்கமான பணிக்காகப் புறப்பட்ட நைஜீரிய விமானப் படைக்குச் சொந்தமான ‘ஏடிஆா்-42’ ரக விமானம், ஒண்டோ மாகாணத்தில் உள்ள இக்போகோடா நகரத்தில் கடற்படைத் தளத்துக்கு அருகே நதிக்கரையில் விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் பயணித்தவா்களின் நிலை மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.