FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இனி ஏஐ அல்ல, எஸ்ஐ! நிறுவனத்தின் பெயரை மாற்றும் மஸ்க்!

ஸ்பேஸ்எக்ஸ் ஏஐ நிறுவனத்தின் பெயர் எஸ்ஐ ஆக மாற்றப்படுவது பற்றி...

எலான் மஸ்க் - AP
பகிர்:

ஸ்பேஸ் எக்ஸின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனத்தின் பெயரை சூப்பர் இன்டலிஜென்ஸ் (எஸ்ஐ) என மாற்றவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் தொழிலதிபர்கள் எலான் மஸ்க், மார்க் ஜூகர்பெர்க், சுந்தர் பிச்சை, ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர், தொழிலதிபர்களுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பெயரை சூப்பர் இன்டலிஜென்ஸ் (எஸ்ஐ) என மாற்றும் கோப்புகளில் கையெழுத்திட்டதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இந்தப் பெயர் மாற்றத்தின் மூலம், அமெரிக்காவின் அனைத்து கூட்டாட்சித் துறைகள் மற்றும் அனைத்து முகமைகளும் இனி அதிகாரப்பூர்வ ஆவணங்கள், வலைதளப் பக்கங்கள் மற்றும் அறிவிப்புகளில் 'ஏஐ' என்பதற்கு பதிலாக 'எஸ்ஐ' என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், பெயர் மாற்றம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் எலான் மஸ்கிடன் கேள்வி எழுப்பிய ஒருவர், ஸ்பேஸ் எக்ஸ் ஏஐ (SpaceXAI) நிறுவனத்தின் பெயர் ஸ்பேஸ் எக்ஸ் எஸ்ஐ (SpaceXSI) என மாற்றப்படுமா? எனக் கேட்டார்.

இதற்கு விரைவில் மாற்றப்படும் என்று பதிலளித்த எலான் மஸ்க், தனது நிறுவனத்தின் பெயர் மாற்றத்தை உறுதி செய்துள்ளார்.

summary

No longer AI, but SI! Musk to change the company's name!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments