ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்
ஜூலையிலேயே சதி திட்டத்தை நடத்த திட்டமிட்டதாகவும் கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோதவிருந்ததாகவும் ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்
பயங்கரவாத சதித் திட்டத்துடன்தான் தான் விமானியாக பணியில் சேர்ந்ததாகவும், ஜூலையிலேயே இந்த சதித் திட்டத்தை தீட்டியதாகவும் ஃப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம் கொடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு கடந்த வாரம் புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திய சக விமானி (ஓமனைச் சோ்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி, விமானத்தை கீழே வீழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்தபோதும் எதிா்த்துப் போராடி பயணிகள்-ஊழியா்கள் உதவியுடன் அந்த முயற்சியை முறியடித்தாா் இந்திய விமானி ஸ்மித் மச்சார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில், துணை விமானி ஹம்மாமி குறித்து வெளியான பல்வேறு தகவல்களும் அவர் அளித்த வாக்குமூலமும் விசாரணையில் திடுக்கிடும் வகையில் உள்ளன.
Advertisement
Advertisement
டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபை விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற ஹம்மாமி, இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தின் மீதே அதை மோதச் செய்யத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டுள்ள ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விசாரணை அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில், விமானத்தின் கேப்டன் ஸ்மித் மச்சரை கொன்றுவிட்டு, சந்தேகம் ஏதும் ஏற்படாத வகையில் விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு விமானம் தரையிறங்க அனுமதி பெற்றுவிட்டு, 9/11 தாக்குதலைப் போல விமான நிலையத்திலுள்ள ஒரு கட்டடம் அல்லது மற்றொரு விமானத்தின் மீது அந்த விமானத்தை மோதச் செய்ய திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
தனது சதிதிட்டம் முழுக்கு முழுக்க இந்திய விமானியின் எதிர்தாக்குதல், படுகாயமடைந்தும் விட்டுக் கொடுக்காமல் விமானத்தைக் காக்க போராயது போன்றவற்றால் நாசமானதாகவும் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தான், இந்த திட்டத்தை ஜூலையிலேயே நடத்தவிருந்த நிலையில், விமானி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுவிட்டதால் அதனை தள்ளிப்போட்டதாகவும் கூறியிருக்கிறாராம்.
பல முறை இஸ்ரேல் சென்றுவந்துள்ளதும், சதி திட்டத்தை நிறைவேற்றவே விமானியாக சேர்ந்ததும், சொந்த நாட்டிலேயே இவர் விமானியாக செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்ததும் இவரது சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம் இவர் தீவிரவாத கருத்துகளைக் கொண்டிருந்தது தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.