FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வேதியியலுக்கான நோபல் பரிசு: இருவருக்கு பகிர்ந்தளிப்பு!

வேதியியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவிப்பு.

ஹென்றி பி. காகன், கென்சோ சோய் - படம்: எக்ஸ்
பகிர்:

2026 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

நேரியல் அல்லாத விளைவுகள், தன்வினையூக்கம் ஆகியவற்றை கண்டறிந்ததற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹென்றி பி. காகன், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கென்சோ சோய் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அமினோ அமிலங்கள் போன்ற சில மூலக்கூறுகள், ஒன்றுக்கொன்று கண்ணாடியில் தெரியும் பிம்பம் போன்ற இரண்டு வடிவங்களில் காணப்படுகின்றன.

Advertisement

Advertisement

ஆனால், உயிரி மூலக்கூறுகளில், இந்த இரண்டு வடிவங்களில் ஒரே ஒரு வடிவம் மட்டுமே காணப்படுகிறது. இவ்வாறு வேதியியல் சமச்சீரற்ற தன்மை எவ்வாறு உருவானது என்பது நீண்ட காலமாக வேதியியலாளர்களுக்கு புரியாத புதிராக இருந்து வந்தது.

இதனைக் கண்டறிந்ததற்காக ஹென்றி பி. காகன் மற்றும் கென்சோ சோய் ஆகியோருக்கு 2026-ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அவர்களின் கண்டுபிடிப்புகள், குறிப்பாக மருந்துகள் போன்றவற்றை தயாரிப்பதற்கான புதிய வேதியியல் வினைகளை வடிவமைக்கும் வேதியியலாளர்களுக்கு, மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளன.

summary

The selection committee has announced that the 2026 Nobel Prize in Chemistry will be shared between two scientists.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments