FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேற்கு நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

நேபாளத்தில் நிலநடுக்கம் பற்றி..

8 அக்டோபர் 2026, 12:31 pm IST
நிலநடுக்கம் (கோப்புப்படம்) - DIN
பகிர்:

மேற்கு நேபாளத்தில் 4.1 ரிக்டர அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி,

புதன்கிழமை இரவு 9:37 மணிக்கு (உள்ளூர் நேரம்) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையப்பகுதி காத்மாண்டுவிலிருந்து சுமார் 750 கி.மீ. மேற்கே உள்ள சுதுர்பாஷிம் மாகாணத்தின் பஜுரா மாவட்டம், புதிகங்கா நகராட்சி-10 பகுதியில் அமைந்திருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலநடுக்கம் அண்டை மாவட்டங்களான பஜங், கலிகோட் மற்றும் அச்சம் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவித சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

ஏற்கெனவெ, பனிப்பாறை உருகியதில் போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 5000 பேர் காணாமல் போகினர். இந்த நிலையில் அடிக்கடி நிலவும் நிலநடுக்கங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பல நிலநடுக்கங்களைச் சந்திக்கும் நேபாளம், மிகவும் தீவிரமான புவித்தட்டு நகர்வு மண்டலங்களில் (நிலநடுக்க மண்டலங்கள் IV மற்றும் V) அமைந்துள்ளது. இதனால் இமயமலை நாடான நேபாளம் நிலநடுக்கங்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments