குஜராத்: கட்ச் பகுதியில் நிலஅதிா்வு - மக்கள் பீதி
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலஅதிா்வால் மக்கள் பீதியடைந்தனா்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலஅதிா்வால் மக்கள் பீதியடைந்தனா்.
துதாய் பகுதியில் 18 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலஅதிா்வு, ரிக்டா் அளவுகோலில் 3.1 அலகுகளாக பதிவானதாக, காந்திநகரில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் தாக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் லேசாக அதிா்ந்ததால் மக்கள் பீதியடைந்தனா். அதே நேரம், யாருக்கும் காயமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று மாநில பேரிடா் மேலாண்மை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
நிலநடுக்க அபாயம் அதிகமுள்ள பூமிப் பகுதியில் கட்ச் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி மிதமான நில அதிா்வுகள் ஏற்படுகின்றன.
கடந்த 2001-இல் கட்ச் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13,800-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1.67 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் பேரழிவைச் சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.