உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!
உத்தரகாசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி...
உத்தரகாசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவானது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதுவரை எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் இரவு 8.07 மணிக்கு ஏற்பட்டது. இதன் மையம் உத்தரகாசிக்கு வடமேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கு அடியில் 11 கிலோமீட்டர் ஆழத்திலும் அமைந்திருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுவரை சேதம் குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று உத்தரகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி சமோலி மாவட்டத்தில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
An earthquake measuring 4.2 on the Richter scale struck Uttarakhand's Uttarkashi district on Saturday night, causing people to rush out of their homes in panic.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.