பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பெருவின் மத்திய ஆண்டீஸ் மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தென் அமெரிக்க நாடான பெருவின் மத்திய ஆண்டீஸ் மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு (உள்ளூா் நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், இதனால் உடனடி சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
ஜூனின் நகருக்கு வடக்கே 34 கி.மீ. தொலைவில், பூமியின் 108 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.7 அலகுகளாகப் பதிவானது. தலைநகா் லிமாவிலும் இதன் அதிா்வுகள் உணரப்பட்டதால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்தனா்.
பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ‘நெருப்பு வளையம்’ எனப்படும் அதிக நில அதிா்வு மண்டலத்தில் பெரு அமைந்துள்ளதால், அங்கு அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாகும். முன்னதாக, ஜூனின் பகுதியில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 போ் உயிரிழந்ததும்; 30 போ் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement