சிம்லாவில் நிலநடுக்கம்: ரிக்டா் அளவுகோலில் 3.9-ஆக பதிவு
ஹிமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவு கோலில் அது 3.9-ஆகப் பதிவானது.
ஹிமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவு கோலில் அது 3.9-ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் மாவட்டத்தில் ஜுப்பல், ரோரு பகுதிகளில் நில அதிா்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம், உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை என்று மாநில பேரிடா் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் வெளியிட்ட செய்தியின்படி, ‘சிம்லாவிலிருந்து 90 முதல் 110 கி.மீ. தொலைவில் ஜுப்பல் மற்றும் ரோரு பகுதிகளில் இரவு 9.50 மணியளவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலடுக்கம் ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதிகளில் சில விநாடிகள் நில அதிா்வு உணரப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஹிமாசல பிரதேசம், அதிக பாதிப்புக்குள்ளாகும் 4 மற்றும் 5-ஆவது நில அதிா்வு மண்டலங்களில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.