FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மிக மோசமான நாள்களுக்குத் தயாராகும் ஆந்த்ரோபிக், ஓபன்ஏஐ! சாமானிய மக்கள்?

ஆந்த்ரோபிக், ஓபன்ஏஐ போன்றவை மிக மோசமான நாள்களுக்குத் தயாராகி வருகின்றனவாம்..

13 அக்டோபர் 2026, 3:12 pm IST
ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் ‘செய்யறிவு’ தொழில்நுட்பம் - Center-Center-Chennai
பகிர்:

உலகின் மிக சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அல்லது சூப்பர் நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கி வரும் ஆந்த்ரோபிக், ஓபன்ஏஐ போன்றவை, தங்களுக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான நாள்களை எதிர்கொள்ள திட்டமிட்டு வருகின்றன.

ஏதோ, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் அல்ல, தாங்கள் உருவாக்கும் செய்யறிவு, ஒரு பேரழிவை ஏற்படுத்தும் நாள் வந்தால், நாட்டு மக்களும் அமெரிக்க அரசும் தங்களுக்கு எதிராக திரும்பினால், என்ன செய்வது என்பது குறித்து செய்யறிவை உருவாக்கி வரும் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து வருவதாக வெளிநாட்டு செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

ஒருவேளை, செய்யறிவு தங்களது கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி, தன்னிச்சையாக செயல்படத் தொடங்கி சைபர் தாக்குதல்களை நடத்தினால், வங்கிச் சேவையை முடக்கினால், நாடு முழுவதும் இணைய வசதியை முடக்கினால், தண்ணீர், மின்சார சேவையை முடக்கினால் என்னவாகும்?

Advertisement

Advertisement

கற்பனை செய்து பார்க்க சற்று சிரமமாக இருந்தாலும் விரைவில் இது நடக்கப்போகும் ஒரு செயல்தான் என்பதை யாராலும் சொல்லிவிடலாம். இவை ஏதோ ஒரு சில ஆண்டுகள் கழித்து என்று மட்டும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் ஆந்த்ரோபிக், ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளன.

தங்களால் தவிர்க்க முடியாத ஒரு பேரிடரை எதிர்கொள்ளும் நாளை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்கள் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ஓபன்ஏஐ பகிரங்கமாகவே கூறியிருக்கிறதாம்.

கடந்த ஜூலை மாதத்திலேயே செய்யறிவு மனிதக் கட்டுப்பாடுகளை மீறி செயல்படத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

எனவே மீண்டும் அவை நடக்காது என இனியும் சொல்ல முடியாத நிலையில், செய்யறிவு மனிதனின் கட்டுப்பாட்டை விட்டு வெளியேறினால் நடக்கப் போகும் எதிர்வினைகளை எதிர்கொள்ள இந்த பெரிய நிறுவனங்கள் இப்போதிலிருந்தே தயாராகத் தொடங்கியிருக்கின்றன.

ஆனால், வங்கியிலிருக்கும் காசை எடுக்க முடியாது, தண்ணீர் கிடைக்காது, மின்சாரம் வராது என்றால் மக்கள் எப்படி முன்கூட்டியே தயாராக முடியும்? செய்யறிவை உருவாக்கி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த நீங்கள் பேரிடரை சமாளிக்கலாம், பேய், பூதம் போல செய்யறிவை பார்க்காமலேயே பயப்பட்டுக் கொண்டிருக்கும் பாவப்பட்ட மக்கள் என்னதான் செய்வார்கள் என்பதே எல்லோர் கேள்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments