FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிரான்ஸ் கலவரம்: 1,800-க்கும் மேற்பட்டோர் கைது!

பிரான்ஸில் ஏற்பட்ட வன்முறை மற்றும் மோதல்களைத் தொடர்ந்து 1,800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 அக்டோபர் 2026, 10:59 pm IST
போராட்டத்தில் பிரான்ஸ் அதிபரை விமர்சிக்கும் விதமாக பதாகையை ஏந்திய போராட்டக்காரர். - AP
பகிர்:

பிரான்ஸில் ஏற்பட்ட வன்முறை மற்றும் மோதல்களைத் தொடர்ந்து 1,800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் அதிகமடைந்துள்ள விலைவாசி, வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பள்ளிகளில் நிலவும் மோசமான நிலைமைகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன.

அதில், போராட்டக்காரர்களிடையே வெடித்த வன்முறையில் காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டு, பல கடைகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் கிட்டத்தட்ட 1,800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

முகமூடி அணிந்த குழுக்கள் அங்குள்ள பல பொதுக் கட்டடங்களுக்குத் தீ வைத்துத் தாக்கியதாகவும், நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியதாகச் செய்திகள் வெளியாகின.

இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு தீவிர இடதுசாரிக் குழுக்களே காரணம் என அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வன்முறை மற்றும் மோதல்கள் காரணமாக பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகரில் மட்டும் 855 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்ஸ் முழுவதும் நடந்த போராட்டங்களில் கிட்டத்தட்ட 550,000 பேர் வரை பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், 500-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

summary

France riots: More than 1,800 people arrested!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments