தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது!
தில்லியில் 2-வது நாளாக நீடிக்கும் சிஜேபி போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி, தில்லியில் 2-வது நாளாக நீடிக்கும் சிஜேபி போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்த போராட்டம் தில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையில் 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்தது. அப்போது ஜந்தர் மந்தரை நோக்கி முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற 100-க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். பலர் காவல் துறை பேருந்துகளில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டனர்.
மாணவ அமைப்புகளான இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம், கிராந்திகாரி யுவ சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்களும், சிஜேபி ஆதரவாளர்களும் தலைநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜந்தர் மந்தரை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ஜான் பிரிட்டாஸும் ஒருவர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
சனிக்கிழமை சிஜேபி ஆதரவாளர்களை அங்கே கூடவிடாமல் போலீஸார் தடுத்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என சிஜேபி அறிவித்திருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக தில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக 30,000-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டி அவர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), மாணவர் அமைப்புகள் போன்றவை தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தை முன்னெடுக்கவிருந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு இன்று நிபந்தனையில் விடுவிக்கப்பட்டனர்.
Over 100 protesters were detained on Sunday as they raised slogans and marched towards Jantar Mantar, with several seen being dragged into police buses, as the protest called by the Cockroach Janata Party (CJP) entered its second day amid heavy security deployment across Delhi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.