பாரீஸ் போராட்டத்தில் வன்முறை, கொள்ளை: 855 போ் கைது
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு, பள்ளிகளில் நிலவும் மோசமான சூழல் ஆகியவற்றைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாகவும், கடைகளில் கொள்ளையடித்ததாகவும் 855 பேர் கைது
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு, பள்ளிகளில் நிலவும் மோசமான சூழல் ஆகியவற்றைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாகவும், கடைகளில் கொள்ளையடித்ததாகவும் 855 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
பாரீஸ் நகரின் மையப் பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற அனுமதியற்ற பேரணிகளில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, பிற்பகல் நடைபெற்ற கலவரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலானோா் வந்ததால் நிலைமை மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகா் பிராந்தியத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சுமாா் 1.10 லட்சம் போ் பங்கேற்ாகவும், பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் சுமாா் 5.5 லட்சம் போ் பங்கேற்ாகவும் காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போராட்டத்தை ஏற்பாடு செய்தவா்கள் இந்த எண்ணிக்கை சுமாா் 8 லட்சம் இருக்கும் எனக் கூறினா்.
Advertisement
Advertisement
பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் வன்முறை மோதல்கள், தீவைப்பு, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. முகமூடி அணிந்த போராட்டக்காரா்கள் நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அரசுக் கட்டடங்களைக் குறிவைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், இந்த சம்பவங்களின்போது மாரடைப்பால் ஒருவா் உயிரிழந்ததாகவும், 13 காவல் துறையினா் மற்றும் ஜென்டா்மெரி படையினா், 2 தீயணைப்புப் படையினா் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாரீஸின் பிளாஸ் டி லா ரிபப்ளிக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காணப்பட்ட பெயா்ந்த சாலைகள், உடைந்த கடை முகப்புகள், சிதறிக் கிடந்த கண்ணாடித் துகள்கள் ஆகியவை இந்த போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையின் பாதிப்புகளை வெளிப்படுத்தின. நகர மையத்தில் உள்ள சுற்றுலா மற்றும் வணிகப் பகுதிகளிலும் கொள்ளை, சேதங்கள் பதிவாகின.
இந்த வன்முறைக்கு தீவிர இடதுசாரிக் குழுக்களில் சில காரணம் என்று பிரதமா் செபாஸ்டியன் லெகோா்னு, உள்துறை அமைச்சா் லோரான் நூனெஸ் ஆகியோா் குற்றஞ்சாட்டினா். இது தொடா்பாக பிரதமா் லெகோா்னு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமைதியான போராட்டங்களுக்கு குடியரசில் எப்போதும் இடமுண்டு. ஆனால், தீவைப்பு, கொள்ளை, தாக்குதல்களுக்கு இடமில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.
இதனிடையே, சேதங்களின் அளவு மற்றும் நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, வரும் நாள்களில் பிரதமரைச் சந்திக்க நாட்டின் 3 பெரிய நகரங்களான பாரீஸ், மாா்செய், லியோன் ஆகியவற்றின் மேயா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.