FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமெரிக்காவின் அழுத்தம்! ஈரான் உடனான எல்லையை மூடிய இராக்!

அமெரிக்காவின் அழுத்தத்தால் ஈரான் உடனான எல்லையை இராக் அரசு மூடியதாகத் தகவல்...

இராக் பிரதமர் அலி அல்-சைதி - கோப்புப் படம்
பகிர்:

ஈரான் உடனான எல்லையைத் தேதி குறிப்பிடாமல் இராக் அரசு மூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் உடனான அல்-ஷீப் எனும் நிலம் வாயிலான எல்லையை இராக் அதிகாரிகள் புதன்கிழமை (அக். 21) காலை முதல் மூடியுள்ளதாகவும், அதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை, இராக்கின் சட்டத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையில், இராக் பிரதமர் அலுவலகத்தின் முடிவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

ஈரான் மற்றும் இராக் ஆகிய இருநாடுகளும் அரசியல், பொருளாதாரம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் நெருங்கிய உறவுகளை கடைபிடித்து வருகின்றன. இருநாடுகளும் 8 அதிகாரப்பூர்வ எல்லை வாயில்களுடன் சுமார் 1,400 கி.மீ. நீளத்துக்கு எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன.

ஏற்கெனவே, ஈரான் அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, தொடர்ந்து பல்வேறு நாடுகளை அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தி வருகின்றது.

கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இராக் பிரதமர் அலி அல்-சைதி நியூயார்க் சென்றிருந்தபோது இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க அரசு அவருக்கு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஈரான் உடனான எல்லையை மூடுவதற்கு அதன் அண்டை நாடுகளை அமெரிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

The Iraqi government has reportedly closed its border with Iran without specifying a date.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments