FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இஸ்ரேல் தேர்தல்! நெதன்யாகுவுக்கு எதிராக அரபு கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு?

இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக அரபு கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு அமைய வாய்ப்பு...

56 வினாடிகள் முன்பு
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு - முன்னாள் ராணுவத் தளபதி ஐசென்கோட் - AP
பகிர்:

இஸ்ரேலில் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், அரபு கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு அமையக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் நாட்டில், கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 27) அன்று நடந்து முடிந்த பொதுத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான வாக்கு எண்ணிக்கையானது புதன்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றது.

இந்தத் தேர்தலில், பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி காடி ஐசென்கோட் உள்ளிட்டோரின் கூட்டணிகள் பெரும்பான்மையைப் பெறமாட்டார்கள் எனக் கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பதிவான வாக்குகளில் தற்போது வரை 72 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாகவும், நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 54 இடங்களில் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஐசென்கோட் தலைமையிலான கூட்டணி 48 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், அரபு கட்சிகள் 18 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளதாக, இஸ்ரேலின் மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய சட்டத்தின்படி, அரசு அமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் 61 இடங்களைப் பெறுவது கட்டாயம் என்பதால், அந்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அரசை அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.

ஆனால், தற்போது நெதன்யாகு அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதால், ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும், அரபு கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசை அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

summary

As the vote count for the general election in Israel is underway, it is being suggested that a new government could be formed with the support of Arab parties.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments