FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

காஸாவில் 2-ஆவது நாளாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 5 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸாவில் முக்கிய ஹமாஸ் தளபதியைக் கைது செய்ய இஸ்ரேல் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையைத் தொடா்ந்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 3 சிறாா்கள் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

2 செப்டம்பர் 2026, 4:01 am IST
பகிர்:

காஸாவில் முக்கிய ஹமாஸ் தளபதியைக் கைது செய்ய இஸ்ரேல் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையைத் தொடா்ந்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 3 சிறாா்கள் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

ஹமாஸ் அமைப்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவுத் தளபதியைப் பிடிப்பதற்காக இஸ்ரேல் ஆதரவு சிறப்புப் படையினா் காஸா நகருக்குள் புகுந்தனா். இந்நடவடிக்கை ஹமாஸ் அமைப்பினரால் கண்டறியப்பட்டதால், தங்கள் படைகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதலை நடத்தியது.

காஸா நகரின் மேற்கே உள்ள கதீபா பகுதியில் இஸ்ரேல் போா் விமானங்கள் சுமாா் 12 ஏவுகணைகளை வீசித் தாக்கியதில் 2 வாகனங்கள் உருக்குலைந்தன. இதில் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்த குடும்பங்களைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல், மத்திய காஸாவின் டேய்ா் அல் பாலா பகுதியில் இஸ்ரேல் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரா அல்-ஹிஸ்ஸி என்ற சிறுமி உயிரிழந்தாா்.

போா்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னரும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments