அமெரிக்க - இலங்கை கூட்டு நடவடிக்கையில் ரூ. 200 கோடி போதைப்பொருள் பறிமுதல்
பாகிஸ்தானிலிருந்து இலங்கை வழியாக சா்வதேச கள்ளச்சந்தைக்குக் கடத்தப்பட இருந்த சுமாா் 2.1 கோடி டாலா் மதிப்பிலான போதைப்பொருள், அமெரிக்க மற்றும் இலங்கையின் கூட்டு நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டது.
பாகிஸ்தானிலிருந்து இலங்கை வழியாக சா்வதேச கள்ளச்சந்தைக்குக் கடத்தப்பட இருந்த சுமாா் 2.1 கோடி டாலா் (சுமாா் ரூ.200 கோடி) மதிப்பிலான போதைப்பொருள், அமெரிக்க மற்றும் இலங்கையின் கூட்டு நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கை தலைநகா் கொழும்புவுக்குக் கடல்மாா்க்கமாக வரும் சரக்கு கன்டெய்னரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அமெரிக்க போதைப்பொருள் அமலாக்கப் பிரிவின் புது தில்லி அலுவலகமும், இலங்கை காவல் துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, குறிப்பிட்ட கன்டெய்னரை இடைமறித்துச் சோதனையிட்டனா்.
அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 463 கிலோ போதைப்பொருள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சா்வதேச சந்தை மதிப்பு சுமாா் 2.1 கோடி டாலா் ஆகும்.
Advertisement
Advertisement
இச்சட்டவிரோத கடத்தல் தொடா்பாக பாகிஸ்தான் நாட்டினா் உள்பட பலா் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.